‘Uncategorized’ பகுப்புக்கான தொகுப்பு

2008 – ஒரு சிறப்பு பார்வை

ஜனவரி 6, 2009

மறக்க முடியுமா? 2008 ஐ

ஆம், 2008 ஆம் ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டாகவே பொருளாதார வல்லுனர்களால் காணப்படுகிறது. SUBPRIME CRISIS – ஆல் உலக பொருளாதாரமே சீர் குலைத்தது. அமெரிக்காவில் மிக பெரிய வங்கிகள் திவால் ஆயின. DOWJONES – அமெரிக்காவின் பங்கு சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்தது. வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடியது. இந்திய பங்கு சந்தையும் மிக பெரிய அகல பாதலத்துக்கு தள்ள பட்டது. இவ்வாறு பல கெட்ட செய்திகளுடன் இந்த வருடம் தொடங்கியது.

BEAR STERNS, LEHMAN BROS, MERILL LYNCH, WASHINGTON MUTUAL போன்ற பல அமெரிக்காவின் மிக பெரிய வங்கிகள் திவால் ஆயின. மற்ற வங்கிகளை காப்பாற்ற அமெரிக்கா அரசாங்கம் 700 பில்லியன் டாலர் நிவாரண உதவி அளித்தது. பல கார் நிறுவங்களும் நிவாரண உதவி கேட்டு அரசாங்கத்திடம் முறை இட்டன. வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் உயர்ந்தது. நல்ல செய்திகளோடு கெட்ட செய்திகளே அதிகமாக காணப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்க பட்டார்.

இந்தியாவிலும் இந்த பொருளாதார சிற்குலைவின் தாக்கம் பெரிதாக காணப்பட்டது. இந்திய பங்கு சந்தை தலைகிழ்ளாக மாறியது. பங்குகளின் விலைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. பல இந்திய நிறுவனங்கள் செயல்படவே திணறின. கட்சா எண்ணெய் விலை 147 டாலரை தொட்டது. பணவீக்க விகிதம் 13 சதவிதத்தை தாண்டியது. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொண்டன. மிகப்பெரிய சில நிறுவனங்கள் புதிதாக யாரையும் பணிக்கு அமர்த்தவில்லை. சில கார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்தன. இந்திய எங்கிலும் முக்கிய நகரங்களில் குண்டுகள் வெடித்தன, இறுதியாக மும்பையில் தாஜ் ஹோட்டலில் நிகழ்ந்த திவிரவாத தாக்குதல் மனதில் ஆறாத வடுவாக மாறியே விட்டது.

ஆண்டின் இறுதியில் கட்சா எண்ணெய் 35 டாலரை தொட்டது. பணவீக்க விகிதம் 6 சதவிதத்தை தொட்டது போன்றவை சில நற்செய்திகள். பாகிஸ்தானுடன் போர் மூளும் அபாயம் என்கிற கெட்ட செய்தியோடு இந்த வருடம் 2008 மறக்க முடியாத வருடமாகவே முடிகிறது.

மீண்டும் சந்திப்போம் – சரவணன் தியாகராஜன்

பணம் தேடி ஒரு பயணம்

டிசம்பர் 29, 2008

பணத்தை தேடி மனிதன் ஓடுகிறான் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. இன்றைய மனிதன் பணம் சம்பாதிப்பதையே தன் குறிக்கோள் ஆக கொண்டு நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறான். ஒரு மனிதன் தான் சம்பாதித்த பணத்தை பண்மடங்காக பெருக்குவதக்கு பங்கு சந்தையும் ஒரு வழியாக காணப்படுகிறது. பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி? பங்குகளை தேர்ந்து எடுப்பது எப்படி? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிப்பதற்காக நான் எனது வாழ்கையில் கற்ற பாடங்கள் பதிவு செய்கிறேன் “பணம் தேடி ஒரு பயணம் – பங்கு சந்தை” என்ற என் நூல் வாயிலாக!!!!!!!!!!!

மீண்டும் சந்திக்கிறேன் – சரவணன் தியாகராஜன்

Hello world!

டிசம்பர் 22, 2008

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!